tend சார்பு கொண்டிரு cārpu koṇṭiru (saarbu vecciru) (7 tr) be likely; have a tendency or disposition to do or be s.t.; be inclined
Usage:
கடைசியில் விஷயங்கள் தானாகவே வேலை செய்யும் சார்பு கொண்டுள்ளன. ஆனால் அது நடப்பதற்குக் கொஞ்ச நேரமாகும் kaṭaiciyil viṣayaṅkaḷ tāṉākavē vēlai ceyyum cārpu koṇṭuḷḷaṉa. āṉāl atu naṭappataṟkuk koñca nēramākum kaḍesiyle viṣayanga taanaavee veele seyra saarbu veccirukku. aanaa adu naḍakradukku konja neeram aahum Things tend to work themselves out in the end, but it may take time.
சார்பு வைத்திரு (ழ் intr) cārpu vaittiru (saarbu veccikkoo) (4 intr) be disposed or inclined; have a strong habit or tendency of doing s.t. a certain way
Usage:
அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து பார்க்காமல் அவள் தன் முழு நம்பிக்கையையும் எப்பொழுதும் ஒரே வாய்ப்பில் போடும் சார்பு வைத்துள்ளாள் aṉaittu vāyppukaḷaiyum ārāyntu pārkkāmal avaḷ taṉ muḻu nampikkaiyaiyum eppoḻutum orē vāyppil pōṭum cārpu vaittuḷḷāḷ ellaa vaayppeyum aaraanji paakkaama ava avaḷooḍa muḻu nambikkeyeyum eppavum oree vaayppule pooḍra saarbu veccirukkaa She usually tends to put all her eggs in one basket, instead of weighing alternatives.
நீண்டு கிட nīṇṭu kiṭa (niiṇḍu keḍa) (7 intr) extend or move in a certain direction
Usage:
சாலை வடகிழக்குத் திசையில் நீண்டு கிடக்கிறது. அதனால் நீ அதற்கு ஏத்தபடி சரி செய்துகொள்ள வேண்டும் cālai vaṭakiḻakkut ticaiyil nīṇṭu kiṭakkiṟatu. ataṉāl nī ataṟku ēttapaṭi cari ceytukoḷḷa vēṇṭum rooḍu vaḍakeḻakku deseyle niiṇḍu keḍakkudu. adanaale nii adukku eettabaḍi sari seyyaṇum The road tends toward the northeast, so you have to correct for that.
பார்த்துக்கொள் (1 tr) pārttukkoḷ (paattukkoo ) (4 tr) serve, take care of; watch over, look after
Usage:
அவன் செம்மறி மற்றும் வெள்ளாடுகளைப் பிழைப்புக்காகப் பார்த்துக் கொண்டான் avaṉ cemmaṟi maṟṟum veḷḷāṭukaḷaip piḻaippukkākap pārttuk koṇṭāṉ avan semmari aaḍeyum veḷḷaaḍeyum poḻeppukkaaha paattukkiṭṭaan He tended sheep and goats for a living.