taint களங்கப்படுத்து kaḷaṅkappaṭuttu (kaḷangam paḍuttu) (3 intr) defile, sully, corrupt; make unfit to eat or drink
Usage:
அந்த ஆற்றிலிருந்து வரும் மீன்கள் இன்னாட்களில் பாதரசத்தால் களங்கப்பட்டிருக்கும் போக்கு உள்ளது anta āṟṟiliruntu varum mīṉkaḷ iṉṉāṭkaḷil pātaracattāl kaḷaṅkappaṭṭirukkum pōkku uḷḷatu anda aattulerundu varra miin ellaam ippa paadarasattaale kaḷanga paḍura pookku irukku The fish from that river nowadays tend to be tainted with mercury.
பேர் கெட்டுப் போ pēr keṭṭup pō (peer keṭṭu poo) (3b intr) cast aspersions on the reputation of; place under suspicion or cast doubt upon; tarnish
Usage:
ஊழல் வழக்கில் சிக்கிய அரசியல்வாதி பேர் கெட்டுப் போய்விட்டார் ūḻal vaḻakkil cikkiya araciyalvāti pēr keṭṭup pōyviṭṭār uuḻal vaḻakkule sikkiya arasiyal vaadi peer keṭṭu pooyiṭṭaaru The reputation of the politician embroiled in the corruption scandal got tainted.
கெட்டுப்போ keṭṭuppō (keṭṭuppoo) (3b intr) become discolored or unsafe; be contaminated, tarnished
Usage:
அந்தப் பிரதேசத்திலிருந்து வரும் வொயின் எல்லாம் கெட்டுப்போனதென்று அவர்கள் சொன்னார்கள் antap piratēcattiliruntu varum voyiṉ ellām keṭṭuppōṉateṉṟu avarkaḷ coṉṉārkaḷ anda pradeesattulerundu varra voyin ellaam keṭṭuppoonaduṇṇu avanga sonnaanga They claimed that wine from those regions was tainted.