sprout கிளைவிடு kiḷaiviṭu (keḷeviḍu) (4 tr) put forth branches, shoots; branch out
Usage:
புதிய செடி ஓர் ஆண்டிலேயே தான் பெரிய கிளைவிட்டிருந்தது putiya ceṭi ōr āṇṭilēyē tāṉ periya kiḷaiviṭṭiruntatu pudu ceḍi oru varuṣattuleeyee daan periya keḷaviṭṭirundadu In just one year, the new plant has sprouted big shoots.
Synonyms:
தளிர் விடு (4 tr) (taḷir viḍu) விளை (6b tr) (veḷe)
தழை விடு taḻai viṭu (taḻe vuḍu) (4 intr) grow or develop quickly; shoot up; proliferate
Usage:
மழை விழுந்ததும் களை எல்லாம் மளமளவென்று தழை விட ஆரம்பித்துவிட்டது maḻai viḻuntatum kaḷai ellām maḷamaḷaveṉṟu taḻai viṭa ārampittuviṭṭatu maḻe viḻundadum kaḷeyellaam maḷamaḷaṇṇu taḻe viḍa aarambicciṭṭudu As soon as the rainfall began, the weeds start sprouting like mad.
முளைவிடு muḷaiviṭu (moḷeviḍu) (4 intr) come out, spring up, turn up, appear
Usage:
எங்கள் தோட்டத்தில் பூச்செடி இப்பொழுது முளைவிட்டிருக்கிறது eṅkaḷ tōṭṭattil pūcceṭi ippoḻutu muḷaiviṭṭirukkiṟatu enga tooṭṭattule puucceḍi ippa moḷeviṭṭirukku A flowering plant has suddenly sprouted in our garden.
துளிர் tuḷir (tuḷiru) (2 intr) put forth buds and shoots; be in bloom; blossom
Usage:
காட்டில் மரங்கள் பூவுடன் துளிர்ந்தன kāṭṭil maraṅkaḷ pūvuṭaṉ tuḷirntaṉa kaaṭṭule maranga puuvooḍa tuḷindadu The trees in the forest were sprouting blossoms.