outline சுருக்கமாகச் சொல்லு curukkamākac collu (surukkamaa sollu) (3c tr) say or sketch briefly; provide an outline; give the general picture of s.t.; sketch, delineate, trace, epitomize
Usage:
இந்தத் திட்டத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்; மற்ற விவரங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் intat tiṭṭattaic curukkamākac colluṅkaḷ; maṟṟa vivaraṅkaḷai nāṉ pārttukkoḷkiṟēṉ niinga inda tiṭṭatte surukkamaa sollunga; matta vevarangaḷe naan paattukkreen You outline the plan; I'll look after the other details.
வரம்பு கட்டு varampu kaṭṭu (varambu kaṭṭu) (3 intr) draw a line around the border of s.t.
Usage:
தாளில் இடது பக்கமும் வலது பக்கமும் தாராளமாக வரம்பு கட்டிக்கொண்டு அதற்குள் எழுத ஆரம்பியுங்கள் tāḷil iṭatu pakkamum valatu pakkamum tārāḷamāka varampu kaṭṭikkoṇṭu ataṟkuḷ eḻuta ārampiyuṅkaḷ taaḷule eḍadu pakkamum valadu pakkamum daaraaḷamaa varambu kaṭṭikkiṭṭu adukkuḷḷe eḻuda aarambiinga Outline the paper on the left and right and then write only inside the lines.