mark (down) குறித்துக்கொள் (1 tr) kuṟittukkoḷ (kuriccukkoo) (4 tr) record s.t.; write down; make a record of; jot down
Usage:
கடையில் என்னென்ன வாங்கவேண்டும் என்று முதலிலேயே குறித்துக்கொண்டேன் kaṭaiyil eṉṉeṉṉa vāṅkavēṇṭum eṉṟu mutalilēyē kuṟittukkoṇṭēṉ kaḍeyle enn-enna vaangaṇum-ṇu modalleeyee kuriccikkiṭṭeen I have marked down in advance all the items that I need to buy at the store.
பார்த்துக்கொள் (1 tr) pārttukkoḷ (paattukkoo) (4 tr) make a mental note of, notice; take note of
Usage:
இந்த இடத்தை நன்றாகப் பார்த்துக்கொள். திரும்பி வரும்போது இந்த இடத்தில் தான் திரும்ப வேண்டும் inta iṭattai naṉṟākap pārttukkoḷ. tirumpi varumpōtu inta iṭattil tāṉ tirumpa vēṇṭum inda eḍatte nallaa paattukkoo. tirumbi varrappa inda eḍattuledaan tirumbaṇum Mark this place well (in your memory). We need to make a right turn here on the way back.
விலை குறை vilai kuṟai (vele kore) (6b tr) reduce the price, esp. temporarily; discount, cut prices; knock down
Usage:
இந்தக் கடையில் ஒரு பொழுதும் எந்தப் பொருளுக்கும் விலை குறைக்கவே மாட்டார்கள் intak kaṭaiyil oru poḻutum entap poruḷukkum vilai kuṟaikkavē māṭṭārkaḷ inda kaḍeyle eppavum oru poruḷukkum vele korekkavee maaṭṭaanga They never mark down the prices of any of the items in this shop, ever.