jam நெருக்கித்திணி nerukkittiṇi (nerukki tiṇi) (6b tr) pack tightly; stuff closely; pack in close together
Usage:
இப்பொழுது நீ உன்னுடைய சாமான்களைச் சும்மா பையில் நெருக்கித்திணிக்க வேண்டியதுதான் ippoḻutu nī uṉṉuṭaiya cāmāṉkaḷaic cummā paiyil nerukkittiṇikka vēṇṭiyatutāṉ ippa nii onnooḍa saamaane summaa paiyle nerukki tiṇiccidaan aahaṇum You just have to jam your stuff into the bag for now.
ஜேம் பண்ணு jēm paṇṇu (jeem paṇṇu) (3 tr) block, as a machine, etc.; make unworkable, as a lock, a door, a machine, etc.
Usage:
அந்தப் பூட்டைப் பார்த்துத் திற; ஜேம் பண்ணிவிடாதே antap pūṭṭaip pārttut tiṟa; jēm paṇṇiviṭātē anda puuṭṭe paattu tira; jeem paṇṇiḍaadee Open the lock carefully; don't jam it.
நசுக்கிக் கொள் (1 tr) nacukkik koḷ (nasukki koo) (4 tr) bruise or crush, as o's hand, fingers, etc.; get caught or pinched in a tight place, resulting in damage or pain
Usage:
அவன் விரலைக் கதவில் நசுக்கிக்கொண்டான் avaṉ viralaik katavil nacukkikkoṇṭāṉ avan verale kadavule nasukkikkiṭṭaan He jammed his finger(s) in the door.
அடைத்துக்கொள் (1 tr) aṭaittukkoḷ (aḍeccukkoo) (4 tr) block up; obstruct, as by crowding, etc.; render s.t. impassable
Usage:
அந்தப் பெரிய ஊர்வலம் முக்கிய தெருக்களை அடைத்துக்கொண்டது; ஒரு சைக்கிள் கூடப் போக முடியவில்லை antap periya ūrvalam mukkiya terukkaḷai aṭaittukkoṇṭatu; oru caikkiḷ kūṭap pōka muṭiyavillai anda periya uurvalam mukkiya terukkaḷe aḍeccikiṭṭadu; oru saikiḷ kuuḍap pooha muḍiyale The long procession jammed the main streets; not even a bicycle could pass.