induct சேர்த்துக்கொள் (1 tr) cērttukkoḷ (seettu koo) (4 tr) take in or admit s.o. as a member, participant, etc.
Usage:
அவர்கள் என்னை அவர்களுடைய நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார்கள் avarkaḷ eṉṉai avarkaḷuṭaiya niṟuvaṉattil cērttukkoṇṭārkaḷ avanga enne avangaḷooḍa niruvanattle seettikiṭṭaanga They inducted me into their organization.
இராணுவத்திற்கு எடு irāṇuvattiṟku eṭu (raaṇuvattukku eḍu) (6 tr) conscript s.o. into the army; draft
Usage:
அவன் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து மூன்றாம் ஆண்டில் இராணுவத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவன் இராணுவத்தில் இரண்டு வருடம் சேவை செய்தான் avaṉ āyirattut toḷḷāyirattu nāṟpattu mūṉṟām āṇṭil irāṇuvattiṟkut tērnteṭukkappaṭṭāṉ. avaṉ irāṇuvattil iraṇṭu varuṭam cēvai ceytāṉ avane aayiratti toḷḷaayiratti naappatti muuṇaam varuṣattule raaṇuvattukku eḍuttaanga. avan raaṇuvattule reṇḍu varuṣam seeve senjaan He was inducted into the armed services in 1943 and served 2 years.