incorporate சேர்த்துக் கொள் (1 tr) cērttuk koḷ (seettukoo) (4 tr) include, as new ideas into a plan, etc.; admit, as a member into a corporation, association, group, etc.; annex, as territory; contain, as a part of the whole
Usage:
எதிர்க் கட்சியின் யோசனைகளையும் நாங்கள் இந்தத் திட்டத்தில் சேர்த்துக்கொண்டிருக்கிறோம் etirk kaṭciyiṉ yōcaṉaikaḷaiyum nāṅkaḷ intat tiṭṭattil cērttukkoṇṭirukkiṟōm edir kacciyooḍa yoosanengaḷeyum naanga inda tiṭṭattule seettu kiṭṭirukkoom We've incorporated the ideas of the opposition party into this plan.
கூட்டி இணை kūṭṭi iṇai (kuuṭṭi eṇe) (6b intr) merge or join together, as into a corporation, a company, etc.
Usage:
அவர்கள் பல்வேறு நாடுகளில் சொத்து வைத்திருக்கும் மின்சார கம்பனியெனக் கூட்டி இணைத்திருக்கிறார்கள் avarkaḷ palvēṟu nāṭukaḷil cottu vaittirukkum miṉcāra kampaṉiyeṉak kūṭṭi iṇaittirukkiṟārkaḷ avanga nereya naaṭṭuḷe sottu veccirukka minsaara kampaniṇṇu kuuṭṭi eṇeccirukkaanga They have incorporated as an energy company, with assets in various countries.
உறுப்பாக ஏற்றுக்கொள் (1 tr) uṟuppāka ēṟṟukkoḷ (uruppaa eettukkoo) (4 tr) take over as a branch or associate of; subsume
Usage:
உங்களுடைய இலக்கண விளக்கத்தில் இந்தப் பகுதியையும் ஒரு உறுப்பாக ஏற்றுக்கொள்வதில் உங்களுக்குத் தடை உண்டா? uṅkaḷuṭaiya ilakkaṇa viḷakkattil intap pakutiyaiyum oru uṟuppāka ēṟṟukkoḷvatil uṅkaḷukkut taṭai uṇṭā? ungaḷooḍa elakkaṇa veḷakkattule inda pahudiyeyum oru uruppaa eettukkradule ungaḷukku taḍe eedaavadu irukkaa? Do you have any objection to incorporating this part into a section of your grammatical description?