ice (down/up) பனிக்கட்டியால் குளிரவை paṉikkaṭṭiyāl kuḷiravai (pani kaṭṭiyaale kuḷiravayyi) (6b tr) cool with ice; make cold by using ice or ice packs
Usage:
காயம் மிக வேதனை கொடுக்கிறது என்றால் அதைப் பனிக்கட்டியால் குளிரவை kāyam mika vētaṉai koṭukkiṟatu eṉṟāl ataip paṉikkaṭṭiyāl kuḷiravai kaayam romba valikkuduṇṇaa ade pani kaṭṭiyaale kuḷiravayyi If the wound hurts too much, ice it with cold packs.
ஜில்லென்று ஆக்கு jilleṉṟu ākku (jilluṇṇu aakku) (3 tr) make cold or chill, as a drink, etc.
Usage:
இந்தப் பானங்களை நீ ஜில்லென்று ஆக்கினால் அவை மேலும் புத்துயிர் அளிப்பதாக இருக்கும் intap pāṉaṅkaḷai nī jilleṉṟu ākkiṉāl avai mēlum puttuyir aḷippatāka irukkum inda paanam ellaatteyum nii jilluṇṇu aakkunaa adellaam innum puttuyir kuḍukradaa irukkum If you ice these drinks they'll be much more refreshing.
பனிக்கட்டி வைத்து அடுக்கு paṉikkaṭṭi vaittu aṭukku (panikkaṭṭi vaccu aḍukku) (3 tr) pack with ice, as fish, etc.
Usage:
மீன்களை வலையிலிருந்து எடுத்தவுடன் அவை கெடாமல் இருக்க அதைப் பனிக்கட்டி வைத்து அடுக்க வேண்டும் mīṉkaḷai valaiyiliruntu eṭuttavuṭaṉ avai keṭāmal irukka ataip paṉikkaṭṭi vaittu aṭukka vēṇṭum miine ellaam valeyulerundu eḍuttavoḍane adu keṭṭu poohaama irukka ade ellaam panikkaṭṭi veccu aḍukkaṇum After the fish are hauled in, they have to be iced down to keep them from spoiling.
உறைந்துபோய் நின்று விடு uṟaintupōy niṉṟu viṭu (orenjupooy niṇṇuḍu) (4 intr) freeze up; become inoperative or stop functioning as if from freezing, as an engine, a machine, etc.
Usage:
காற்றுத்தடுப்புக் கண்ணாடியைச் சுத்தப்படுத்தும் கருவி உறைந்துபோய் நின்று விட்டது. kāṟṟuttaṭuppuk kaṇṇāṭiyaic cuttappaṭuttum karuvi uṟaintupōy niṉṟu viṭṭatu. vaṇḍi kaṇṇaaḍiye suttam paḍutra karuvi orenjupooy niṇṇuḍucci. The windshield wipers got iced up [and we couldn't defrost them].