hurtகாயம் பண்ணிக்கொள் (1 tr, intr)kāyam paṇṇikkoḷ(kaayam paṇṇikkoo )(4 tr, intr)injure o.s. physically; hurt o.s., as with a cut, a wound or a scratch
Usage:
அவன் பென்சில் சீவிக் கொண்டு இடிந்தபோது, விரலில் காயம் பண்ணிக்கொண்டான்avaṉ peṉcil cīvik koṇṭu iṭintapōtu, viralil kāyam paṇṇikkoṇṭāṉ
avan pensil siivikkiṭṭu irundappa, veralle kaayam paṇṇikkiṭṭaan.
When he was sharpening the pencil, he hurt his finger.
வேதனைப் படுvētaṉaip paṭu(veedane paḍu)(2 intr)be hurt in mind; be inwardly suffering
Usage:
அவன் வெளியே காட்டாவிட்டாலும் நீ கூறியதினால் வேதனைப் பட்டுக்கொண்டிருக்கிறான்avaṉ veḷiyē kāṭṭāviṭṭālum nī kūṟiyatiṉāl vētaṉaip paṭṭukkoṇṭirukkiṟāṉ
avan veḷiye kaaṭṭuleṇṇaalum nii sonnadunaale avan veedane paṭṭukkiṭṭurukkaan
He doesn't show it openly, but he's hurting inwardly from what you said.
வேதனைப் படுத்துvētaṉaip paṭuttu(veedane paḍuttu)(3 tr)cause to be hurt in mind, heart; cause to feel wounded in mind, heart
Usage:
நீ என்ன சொன்னாயோ அது அவனை வேதனைப் படுத்தியிருக்கிறது. ஆனால் அவன் அதைப்பற்றி எதுவும் சொல்வதில்லைnī eṉṉa coṉṉāyō atu avaṉai vētaṉaip paṭuttiyirukkiṟatu. āṉāl avaṉ ataippaṟṟi etuvum colvatillai
nii enna sonniyoo adu avane veedane paḍuttirukku. aanaa avan ade patti eduvum solradille
What you said hurt him deeply, but he doesn't say anything about it.
கெடுkeṭu(keḍu)(6 tr)damage, injure or harm, as s.o.'s fame, reputation, image, etc.
Usage:
அந்தச் சம்பவம் அவனுடைய புகழைக் கெடுத்து விட்டது. அதிலிருந்து அவனுடைய புகழ் இன்னும் மீண்டு வரவில்லைantac campavam avaṉuṭaiya pukaḻaik keṭuttu viṭṭatu. atiliruntu avaṉuṭaiya pukaḻ iṉṉum mīṇṭu varavillai
anda sambavam avanooḍa pohaḻe keḍuttuḍucci. aduleerndu avanooḍa pohaḻ innum miiṇḍu varale
That incident hurt his reputation, and it has never recovered.
லாரி வாகனத்தை மோதியபொழுது மக்கள் மோசமாகக் காயப்படுத்தப்பட்டார்கள்lāri vākaṉattai mōtiyapoḻutu makkaḷ mōcamākak kāyappaṭuttappaṭṭārkaḷ
laari vaṇḍiye moodunappa anda vebattu janangaḷe moosamaa kaayappaḍuttiḍucci
When the truck hit the car, people were hurt severely.
கேடு விளைவிkēṭu viḷaivi(keeḍu veḷevi)(6 tr)cause damage or harm, as to s.o.'s reputation, etc.; affect or impair
Usage:
அந்த மாதிரி விஷயம் ஒரு பெண்ணின் புகழுக்குச் சரிப்படுத்த முடியாத அளவிற்குக் கேடு விளைவிக்கும்anta mātiri viṣayam oru peṇṇiṉ pukaḻukkuc carippaṭutta muṭiyāta aḷaviṟkuk kēṭu viḷaivikkum
anda maadiriyaana viṣayam oru poṇṇooḍa pohaḻukku sari seyya muḍiyaada aḷavukku keeḍu veḷevikkum
Such a thing can hurt a woman's reputation irreparably.