graze மேய் mēy (meeyyi) (2b tr) eat grass or grain (as cattle, ruminants); feed
Usage:
அந்த மாடு வயலில் மேய்ந்து கொண்டிருக்கிறது anta māṭu vayalil mēyntu koṇṭirukkiṟatu anda maaḍu vayalle meenjikiṭṭirukku That cow is grazing in the field.
Synonyms:
மேயவிடு (4 tr) (meeyaviḍu)
உராய்ந்துவிடு urāyntuviṭu (oraanjuḍu) (4 tr) (of skin) scrape or scratch; touch, rub or strike lightly in passing
Usage:
துப்பாக்கிக்குண்டு அவனை உராய்ந்துவிடும்படிச் செய்தேன். ஆனால் பெரிதாகச் சேதம் செய்யவில்லை tuppākkikkuṇṭu avaṉai urāyntuviṭumpaṭic ceytēṉ. āṉāl peritākac cētam ceyyavillai tuppaakki kuṇḍaale avane oraanjuḍa senjeen. aanaa perisaa seedam seyyale I managed to graze him with a bullet, but didn't cause much damage.
Synonyms:
உரசிக்கொண்டு போ (3b intr) (orasikkiṭṭu poo) புல் மேய் (2b t, intr) (pullu meeyi)
மேய் mēy (meeyi) (6b tr) cause (animals) to graze; tend (animals while grazing); act as a shepherd, etc.; feed animals with fodder
Usage:
நாங்கள் பல வருடங்களாக எங்கள் கால்நடைகளைப் பொது நிலத்தில் மேய்த்துக்கொண்டு வந்தோம். ஆனால் இப்போது எங்களால் முடியாது nāṅkaḷ pala varuṭaṅkaḷāka eṅkaḷ kālnaṭaikaḷaip potu nilattil mēyttukkoṇṭu vantōm. āṉāl ippōtu eṅkaḷāl muṭiyātu naanga nereya varuṣangaḷaa enga kaalnaḍeyellaam podu nelattule meeycuṭṭu vandoom. aanaa ippa engaḷaale muḍiyaadu We grazed our animals on public land for years, but now we're not allowed to any more
சிராய்த்துக்கொள் (1 tr) cirāyttukkoḷ (seraaccu koo ) (4 tr) scrape o's skin; get o's skin or o.s. scraped or scratched
Usage:
என் முழங்கையை அந்த நாற்காலியில் தேய்த்துக்கொண்டேன். ஆனால் மெல்லியதாகத்தான் சிராய்த்துக் கொண்டேன் eṉ muḻaṅkaiyai anta nāṟkāliyil tēyttukkoṇṭēṉ. āṉāl melliyatākattāṉ cirāyttuk koṇṭēṉ ennooḍa moḻangaiye anda naarkaaliyile teeccikkiṭṭeen. aanaa melisaadaan seraaycci kiṭṭeen I scraped my elbow on that chair, but just grazed it lightly.