glimmer விட்டு விட்டு எரி viṭṭu viṭṭu eri (viṭṭuṭṭu eri) (2b intr) burn with a faint unsteady light
Usage:
மின்மினிப்பூச்சி அதன் குகையில் விட்டு விட்டு எரிந்து இலேசான ஒளி வெளியிடுகிறது miṉmiṉippūcci ataṉ kukaiyil viṭṭu viṭṭu erintu ilēcāṉa oḷi veḷiyiṭukiṟatu minminippuucci adanooḍa koheyle viṭṭuṭṭu erinju leesaana oḷi veḷiiḍudu The glowworm, glimmering away in its cave, emits a very faint light.
Synonyms:
கண் சிமிட்டு (3 tr, ta) (kaṇṇu simiṭṭu) மினுக்கு மினுக்கென்று எரி (2b intr) (minuk-minukku-ṇṇu eri)
மினுக்கு மினுக்கென்று ஒளிவீசு miṉukku miṉukkeṉṟu oḷivīcu (minukku minukkuṇṇu oḷiviisu) (3 intr) emit a faint and unsteady light; flicker, glow faintly
Usage:
அறையில் மெழுகுவர்த்தி மினுக்கு மினுக்கென்று ஒளிவீசி வெளிச்சம் குறைவானது aṟaiyil meḻukuvartti miṉukku miṉukkeṉṟu oḷivīci veḷiccam kuṟaivāṉatu areyle meḻuhuvatti minukku minukkuṇṇu oḷiviisi veḷiccam korenjudu The candle flame glimmered and flickered faintly in the room.
Synonyms:
மின்னு (3 intr) (minnu)