fuss about/over அழுதுகொண்டே யிரு aḻutukoṇṭē yiru (aḻudukkiṭṭee iru) (7 intr) be weepy, weeping; keep complaining through self-pity; indulge in self-pity
Usage:
அந்தக் குழந்தை எதற்காக அழுதுகொண்டிருக்கிறது? அதற்கு இப்பொழுதுதான் உணவுகொடுத்தேன் antak kuḻantai etaṟkāka aḻutukoṇṭirukkiṟatu? ataṟku ippoḻututāṉ uṇavukoṭuttēṉ anda koḻande edukku aḻudukkiṭṭurukku? adukku ippadaan saappaaḍu kuḍutteen What is that child fussing about? I just fed it.
கவனித்துக்கொள் (1 tr) kavaṉittukkoḷ (gavaniccikkoo ) (4 tr) attend; take care of; look after, (HS99 \S 3.15.2, 3pn + dat)
Usage:
பாட்டிக்குக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளவும் அவர்களுக்குப் பலகாரம் செய்து கொடுக்கவும் மிகவும் பிடிக்கும் pāṭṭikkuk kuḻantaikaḷaik kavaṉittuk koḷḷavum avarkaḷukkup palakāram ceytu koṭukkavum mikavum piṭikkum paaṭṭikki koḻandengaḷe gavaniccukkavum avangaḷukku palahaaram senji kuḍukkavum romba piḍikkum Grandma loves to fuss over the children and make them treats.