fortify உறுதிப்படுத்து uṟutippaṭuttu (urudippaḍuttu) (3 tr) confirm; strengthen, make strong or firm; corroborate
Usage:
நாம் இந்தத் தடைகளை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தீவிரவாதிகள் அவற்றை வெடிவைத்து அழித்துவிடுவார்கள் nām intat taṭaikaḷai uṟutippaṭutta vēṇṭum. illaiyeṉṟāl tīviravātikaḷ avaṟṟai veṭivaittu aḻittuviṭuvārkaḷ naama inda taḍeyellaam urudippaḍuttaṇum. illeeṇṇaa tiiviravaadinga adeyellaam veḍivecci aḻiccuḍuvaanga We need to fortify these barricades or the terrorists will blow them up.
Synonyms:
பலப்படுத்து (3 tr) (bala-paḍuttu)
வீரியப்படுத்து vīriyappaṭuttu (viiriyappaḍuttu) (3 intr) make a substance potent and powerful, as wine with alcohol; increase potency
Usage:
இது வீரியப்படுத்தப்பட்ட பழரசம். அதனால் அது மிகவும் போஷாக்காக இருக்கும் itu vīriyappaṭuttappaṭṭa paḻaracam. ataṉāl atu mikavum pōṣākkāka irukkum idu viiriyappaḍuttuna paḻarasam. adanaale adu rombavum pooṣaakkaa irukkum This is fortified wine, so it's much stronger than regular stuff.
திடமாக்கு tiṭamākku (tiḍamaakku) (3 tr) make strong, as o's body, mind, or a country's defenses.; strengthen, build up
Usage:
அவன் அந்தப் பணியைச் செய்யத் தயாராவதற்காக அவனுடைய உடலைத் திடமாக்க முடிவு செய்தான் avaṉ antap paṇiyaic ceyyat tayārāvataṟkāka avaṉuṭaiya uṭalait tiṭamākka muṭivu ceytāṉ avan anda veeleye seyya tayaaraavuradukku avanooḍa oḍambe tiḍamaakka muḍivu senjaan He decided to fortify his body in preparation for the task.
Synonyms:
வலிமைப்படுத்து (3 tr) (valimeppaḍuttu) வலுப்படுத்து (3 tr) (valuppaḍuttu)
பலமூட்டு palamūṭṭu (balamuuṭṭu) (3 tr) replenish o's strength, resources; rebuild
Usage:
போருக்குப் பிறகு, சாப்பாட்டாலும் தூக்கத்தாலும் என்னையே நான் பலம் ஊட்டிக்கொண்டேன் pōrukkup piṟaku, cāppāṭṭālum tūkkattālum eṉṉaiyē nāṉ palam ūṭṭikkoṇṭēṉ saṇḍekki apparam, nalla saappaaḍu saappiṭṭum nalla tuukkam tuungiyum naan enne balamuuṭṭikkiṭṭeen After the battle, I fortified myself with food and sleep.
Synonyms:
வளப்படுத்து (3 tr) (vaḷappaḍuttu)