fetch இலாபம் கிடை ilāpam kiṭai (laabam keḍe) (6b intr (3pn + dat)) bring in or return, as profit
Usage:
அந்த வியாபாரத்தில் எவ்வளவு இலாபம் கிடைக்கும்? anta viyāpārattil evvaḷavu ilāpam kiṭaikkum? anda vyaabaarattule evvaḷavu laabam keḍekkum? How much profit will this business fetch?
Synonyms:
விலைக்குப் போ (3b intr) (velekki poo) விலை கிடை (6b intr) (vele keḍe) கூட்டிக்கொண்டு வா (2c intr) (kuuṭṭikkiṭṭu vaa)
போய் எடுத்துக் கொண்டு வா pōy eṭuttuk koṇṭu vā (pooy eḍuttukkuṭṭu vaa) (2c tr) of animals: run and retrieve s.t., as a ball, a frisbee, etc.
Usage:
என் நாய் போய் எடுத்துக் கொண்டு வர விரும்பும். நான் ஒரு பந்தைப் பல மணி நேரத்திற்கு வீசினாலும் அது அதைப் போய் எடுத்துக் கொண்டு வரும் eṉ nāy pōy eṭuttuk koṇṭu vara virumpum. nāṉ oru pantaip pala maṇi nērattiṟku vīciṉālum atu ataip pōy eṭuttuk koṇṭu varum en naay pooy eḍuttukkiṭṭu vara virumbum. naan oru pande romba maṇi neeramaa viisinaalum adu ade pooy eḍuttukiṭṭu varum My dog loves to fetch; I can throw a ball for hours, and he'll fetch it.
கூட்டிக்கொண்டு வா kūṭṭikkoṇṭu vā (kuuṭṭikkiṭṭu vaa) (2c tr) bring, accompany, escort a person (w. their volition); go and get s.o.
Usage:
சீக்கிரம் மருத்துவுரையைக் கூட்டிக்கொண்டு வா! cīkkiram maruttuvuraiyaik kūṭṭikkoṇṭu vā! siikkram ḍaakḍare kuuṭṭikiṭṭu vaa? Fetch the doctor quickly!
கொண்டு வா koṇṭu vā (koṇḍu vaa, koṇḍaa) (2c tr) go and bring; go and get; go for and bring back, as things, a person (but only without their volition)
Usage:
போய் எல்லோருக்கும் காபி கொண்டுவா pōy ellōrukkum kāpi koṇṭuvā pooy ellaarukkum kaappi koṇḍuvaa Go and fetch coffee for everyone.