excavate தோண்டு tōṇṭu (tooṇḍu) (3 t) dig; dig out; make a hole or cavity
Usage:
புதையலை நாங்கள் தோண்டி எடுத்தோம் putaiyalai nāṅkaḷ tōṇṭi eṭuttōm podeyale naanga tooṇḍi eḍuttoom We excavated the treasure.
Synonyms:
பறி (6b tr) (pari)
குடை kuṭai (koḍe) (2b tr) scoop; hollow; dig, as a tunnel; bore through s.t.
Usage:
ந்யூ யார்க் நகரில் கடந்த பதினைந்து வருடங்களாக அவர்கள் ஒரு புதிய தண்ணீர் வழங்கும் சுரங்கப் பாதையைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள்! nyū yārk nakaril kaṭanta patiṉaintu varuṭaṅkaḷāka avarkaḷ oru putiya taṇṇīr vaḻaṅkum curaṅkap pātaiyaik kuṭaintu koṇṭirukkiṟārkaḷ! nyuu yaarku naharattule kaḍanda padinanju varuṣamaa avanga oru pudu taṇṇi kuḍukra sorange paadeye koḍenjikiṭṭurukkaanga? In New York City, they've been excavating a new water supply tunnel for the last fifteen years!
வெட்டு veṭṭu (veṭṭu) (3 tr) dig, as a hole, a canal, a trench, etc.
Usage:
வேலையாட்களை வைத்து ஒரு கால்வாய் வெட்டினார்கள் vēlaiyāṭkaḷai vaittu oru kālvāy veṭṭiṉārkaḷ veeleyaaḷungaḷe veccu oru kaavaa veṭṭinaanga They excavated a canal using just manual labor.
Synonyms:
பறி (6b tr) (pari)