enclose கட்டிவளை kaṭṭivaḷai (kaṭṭivaḷe) (6b tr) build in; build walls etc. around s.t.; reinforce
Usage:
அந்த அரண்மனையைப் பெரிய சுவருக்குள் கட்டிவளைத்தனர் anta araṇmaṉaiyaip periya cuvarukkuḷ kaṭṭivaḷaittaṉar anda araṇmaneye periya sovarukkuḷḷe kaṭṭivaḷeccaanga They enclosed the palace within high walls.
வேலிபோடு vēlipōṭu (veelipooḍu) (4 tr + dat) surround with a fence; fence in
Usage:
தோட்டத்திற்கு வேலிபோடவில்லை என்றால் ஆடு மாடு செடிகளைத் தின்றுவிடும் tōṭṭattiṟku vēlipōṭavillai eṉṟāl āṭu māṭu ceṭikaḷait tiṉṟuviṭum tooṭṭattuku veelipooḍaleṇṇaa aaḍu maaḍu ceḍiyellaam tiṇṇuḍum If we don't enclose the garden with a fence, cows and goats will eat up all the plants.
சேர்த்துவை cērttuvai (seettuvayyi) (6b tr) insert s.t. in the same envelope with the main contents
Usage:
பணத்தை இந்த அறிவிப்பு மற்றும் தபால் கடிதத்துடன் சேர்த்துவை paṇattai inta aṟivippu maṟṟum tapāl kaṭitattuṭaṉ cērttuvai paṇatte inda tabaal kaḍidattooḍa seettuvayyi Please enclose your payment with this notice
Synonyms:
அடை (6b tr) (aḍe)