devitalize உயிரற்றதாக்கு uyiraṟṟatākku (uyir illaadadaa aakku) (3 tr) make lifeless; ruin; deprive of life
Usage:
ஸோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு அங்கிருக்கும் பல நகரங்கள் உயிரற்றதாக இருக்கின்றன sōviyat yūṉiyaṉiṉ vīḻccikkup piṟaku aṅkirukkum pala nakaraṅkaḷ uyiraṟṟatāka irukkiṉṟaṉa sooviyat yuuniyanooḍa viiḻccikki pinnaale ange irukka nereya naharanga uyirillaama irukku Since the collapse of the Soviet Union, a number of towns there have become absolutely devitalized.
ஊட்டச் சத்துக்களை நீக்கு ūṭṭac cattukkaḷai nīkku (uuṭṭa satte niikku) (3 tr) deprive of vital properties or elements
Usage:
பச்சைக் காய்கறிகளைச் சமைப்பது அதன் ஊட்டச் சத்துகளை நீக்கும் என்று சில மருத்துவர்கள் கூறுகிறார்கள் paccaik kāykaṟikaḷaic camaippatu ataṉ ūṭṭac cattukaḷai nīkkum eṉṟu cila maruttuvarkaḷ kūṟukiṟārkaḷ pacce kaayhariye samekkradu adooḍa uuṭṭa satte niikkumṇu sela ḍaakḍarunga solraanga Some doctors say that cooking raw vegetables devitalizes them.
Synonyms:
நலியவை (6b tr) (naliya vayyi)