design எண்ணு eṇṇu (nene (6b tr)) (3 tr) intend; plan; propose; have or be intended to have as a purpose; designate
Usage:
ப்ரெஸிலியா ப்ரெஸிலின் செயற்திறனுள்ள நவீன தலைநகராக எண்ணப்பட்டது presiliyā presiliṉ ceyaṟtiṟaṉuḷḷa navīṉa talainakarāka eṇṇappaṭṭatu bresiliyaave bresilooḍa seyalttiraṇuḷḷa naviina talenaharaa neneccaanga Brasilia was designed to be an efficient modern capital for Brazil.
Synonyms:
குறி (6b tr) (kuri)
வடிவமை vaṭivamai (vaḍivame) (6b tr) make a preliminary plan or sketch (for a building, a machine, etc)
Usage:
அவர்கள் இன்னும் உலகச் சந்தை மையத்தின் நினைவுச் சின்னத்தை வடிவமைத்துக்கொண்டிருக்கிறார்கள் avarkaḷ iṉṉum ulakac cantai maiyattiṉ niṉaivuc ciṉṉattai vaṭivamaittukkoṇṭirukkiṟārkaḷ avanga innum olaha sande maiyattooḍa nenavu sinnatte vaḍivamecciṭṭirukkaanga They're still designing the memorial for the World Trade Center.
வண்ணக்கோலங்கள் அமை vaṇṇakkōlaṅkaḷ amai (vaṇṇakkoolam ame) (6b tr) plan colorful artistic patterns, (HS99 \S 2.3.5.1 [19])
Usage:
அவள் அழகான பல நிறத் துணிகளை வண்ணக்கோலங்களாக அமைத்தாள். ஆனால் அதை மிகவும் மலிவான விலைக்குத்தான் விற்பாள் avaḷ aḻakāṉa pala niṟat tuṇikaḷai vaṇṇakkōlaṅkaḷāka amaittāḷ. āṉāl atai mikavum malivāṉa vilaikkuttāṉ viṟpāḷ ava aḻahaana pannira tuṇiye vaṇṇakkoolamaa ameccaa. aanaa ade avaḷaale romba malivaattaan vikkamuḍiyum She designed wonderful colorful fabrics, but to be sold at low prices.