abandon விட்டுவிடு viṭṭuviṭu (viṭṭuḍu) (4 tr) relinquish; quit a job; leave; give s.t. up
Usage:
என் அண்ணன் ஆசிரியர் பணியை விட்டுவிட்டு இப்பொழுது காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றுகிறார் eṉ aṇṇaṉ āciriyar paṇiyai viṭṭuviṭṭu ippoḻutu kāval tuṟai atikāriyākap paṇiyāṟṟukiṟār en aṇṇan aasiriyar veeleye viṭṭuṭṭu ippa kaaval tore adihaariyaa veele paakraaru My older brother has abandoned his teaching post and has now joined the police force.
Synonyms:
கண்ட்ரோல் எடுத்துவிடு (4 tr) (kanṭrool eḍuttuḍu) சீர்குலை (2b intr) (siirkole)
discontinue விட்டுவிடு viṭṭuviṭu (viṭṭuḍu) (4 tr) leave off (as a habit); stop
Usage:
பல்தேய்ப்பதை நீ ஏன் விட்டுவிட்டாய்? paltēyppatai nī ēṉ viṭṭuviṭṭāy? palteekkrade nii een viṭṭuṭṭe? Why did you discontinue brushing your teeth?
Synonyms:
நிறுத்திவிடு (4 tr) (niruttiyiḍu)
dispense with விட்டுவிடு viṭṭuviṭu (viṭṭuḍu) (4 tr) forego or do without; bypass
Usage:
நாம் வசீகரமான பேச்சை விட்டுவிட்டுத் தீர்மானத்திற்கு வரலாம் nām vacīkaramāṉa pēccai viṭṭuviṭṭut tīrmāṉattiṟku varalām naama vasiiharamaana peecce viṭṭuṭṭu tiirmaanattukku varalaam Let's dispense with the fancy speeches, and cut to the conclusion.
except விட்டுவிடு viṭṭuviṭu (viṭṭuḍu) (4 tr) leave out; omit; exclude
Usage:
முக்கியமான விஷயத்தை விட்டுவிட்டு மற்றதை மட்டும் எழுதியிருக்கிறாயே mukkiyamāṉa viṣayattai viṭṭuviṭṭu maṟṟatai maṭṭum eḻutiyirukkiṟāyē mukkiyamaana viṣayatte viṭṭuṭṭu mattade maṭṭum eḻudiyirukkiyee You have covered all the topics except the most important one
forego விட்டுவிடு viṭṭuviṭu (viṭṭuḍu) (4 tr) give up; abstain from; omit to take or use; resign; relinquish
Usage:
இந்தப் பிரச்சனைக்கு முடிவு காண்பதை இப்போதைக்கு விட்டுவிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் intap piraccaṉaikku muṭivu kāṇpatai ippōtaikku viṭṭuviṭa vēṇṭum eṉṟu nāṉ niṉaikkiṟēṉ inda praccanekki muḍivu kaaṇrade ippadekki viṭṭuḍaṇumṇu naan nenekkreen I think we'll have to forego finding a solution to this problem, at least for now.