anticipate முந்திக்கொள் (1 tr) muntikkoḷ (mundikkoo ) (4 tr) be prepared for a possible circumstance; take s.t. into account; be aware of and prepare for (a future event); regard as probable
Usage:
உன்னிடம் அவர்கள் சில கேள்விகளைக் கேட்க உள்ளார்கள். எனவே நீ முந்திக்கொண்டு அவற்றைப்பற்றி நன்கு தெறிந்து வைத்துக்கொள் uṉṉiṭam avarkaḷ cila kēḷvikaḷaik kēṭka uḷḷārkaḷ. eṉavē nī muntikkoṇṭu avaṟṟaippaṟṟi naṉku teṟintu vaittukkoḷ ungiṭṭe avanga sela keeḷvingaḷe keekka irukkaanga, adanaale nii munkuuṭṭiyee adeppatti nallaa terinji vaccukoo I think they are going to ask you a few questions so you had better anticipate any eventuality.
get ahead of முந்திக்கொள் (1 intr) muntikkoḷ (mundikkoo ) (4 intr) outdo; surpass, exceed s.t.
Usage:
எல்லோரையும் முந்திக்கொண்டு அவன் பேருந்தில் ஏறினான் ellōraiyum muntikkoṇṭu avaṉ pēruntil ēṟiṉāṉ ellaareyum mundikiṭṭu avan bassule eerinaan He got ahead of everyone and boarded the bus first.
go ahead முந்திக்கொள் (1 intr) muntikkoḷ (mundikkoo ) (4 intr) go forward, move ahead; overtake; proceed; continue to advance;
Usage:
நாம் இந்தத் திட்டத்தில் முந்திக்கொள்ள வேண்டும், இல்லை என்றால் பின்னடைந்து விடுவோம் nām intat tiṭṭattil muntikkoḷḷa vēṇṭum, illai eṉṟāl piṉṉaṭaintu viṭuvōm naama inda tiṭṭatte mundikkaṇum, illeeṇṇaa pinnaḍenjuḍuvoom We need to go ahead with this plan, or we'll fall behind.
precede முந்திக்கொள் (1 intr) muntikkoḷ (mundikkoo) (4 intr) be or arrive before the usual or right time; do s.t. before the appropriate time; jump the queue; be an early bird
Usage:
கல்யாண விஷயத்தில் அவன் தன் அக்காவை முந்திக்கொண்டுவிட்டான் kalyāṇa viṣayattil avaṉ taṉ akkāvai muntikkoṇṭuviṭṭāṉ kalyaaṇa viṣayattule avan tan akkaave mundikiṭṭaan He preceded his older sister in the expected order of marriage.