illiterate, be கற்றுக்குட்டியாக இரு kaṟṟukkuṭṭiyāka iru (kattukkuṭṭiyaa iru) (7 intr) be a learner, novice, or beginner; show a lack of knowledge or skill, as in a particular field
Usage:
அவர் கணக்கில் (கணிதத்தில்) மேதை; ஆனால் சீட்டு விளையாட்டில் கற்றுக்குட்டியாக இருக்கிறார் avar kaṇakkil (kaṇitattil) mētai; āṉāl cīṭṭu viḷaiyāṭṭil kaṟṟukkuṭṭiyāka irukkiṟār avar kaṇakkule meede; aanaa avar siiṭṭu veḷeyaaḍle kattukkuṭṭiyaa irukkaaru He's a genius in mathematics; but when it comes to games of cards, he's illiterate.
Synonyms:
தற்குறியாக இரு (7 intr) (tarkuriyaa iru)
எழுதப்படிக்கத் தெரியாமல் இரு eḻutappaṭikkat teriyāmal iru (eḻuda paḍikka teriyaama iru) (7 intr) be unable to read and write, be unlettered
Usage:
அவள் இந்த நாட்டிற்கு வந்தபொழுது எழுதப்படிக்கத் தெரியாமல் இருந்தாள். ஆனால் இப்பொழுது நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறாள் avaḷ inta nāṭṭiṟku vantapoḻutu eḻutappaṭikkat teriyāmal iruntāḷ. āṉāl ippoḻutu niṟaiyak kaṟṟukkoṇṭirukkiṟāḷ ava inda naaṭṭukku vandappa eḻuda paḍikka teriyaama irundaa. aanaa ippa nereya kattukkiṭṭurukkaa She was illiterate when she came to this country, but now she's learned a lot.