grit (teeth) நற நறவென்று பல்லைக் கடி naṟa naṟaveṉṟu pallaik kaṭi (nara naraṇṇu palle kaḍi) (6b tr) grate or grind the teeth noisily
Usage:
அவன் எப்போதும் நற நறவென்று பல்லைக் கடித்துக் கொண்டு இருப்பான் avaṉ eppōtum naṟa naṟaveṉṟu pallaik kaṭittuk koṇṭu iruppāṉ avan eppavum nara naraṇṇu palle kaḍiccukiṭṭiruppaan He grits his teeth and grinds them constantly.
பல்லைக் கடி pallaik kaṭi (palle kaḍi) (6b tr) grate or grind the teeth together; express o's displeasure at s.t. by grinding the teeth together
Usage:
அந்த வேலையை மறுபடியும் செய்யவேண்டும் என்பதனால் அவன் பல்லைக் கடித்தான் anta vēlaiyai maṟupaṭiyum ceyyavēṇṭum eṉpataṉāl avaṉ pallaik kaṭittāṉ anda veeleye marubaḍiyum seyyaṇungradule avan palle kaḍiccaan He was gritting his teeth at the prospect of redoing the work.
பல்லைக் கடித்துக் கொண்டு சமாளி pallaik kaṭittuk koṇṭu camāḷi (palle kaḍiccukiṭṭu samaaḷi) (6b tr) manage with determination, endurance, etc.
Usage:
சும்மா பல்லைக் கடித்துக்கொண்டு சமாளிக்கவேண்டும். cummā pallaik kaṭittukkoṇṭu camāḷikkavēṇṭum. summaa palle kaḍiccikiṭṭu samaaḷikkaṇum. You just have to grit your teeth and hang in there.