go, let வேலையை விட்டு அனுப்பிவிடு vēlaiyai viṭṭu aṉuppiviṭu (veeleye viṭṭu anuppiḍu) (4 tr) dismiss from service; fire; cease to employ
Usage:
முப்பது வருடங்கள் பணியாற்றிய பிறகு, ஒரு தங்கக் கடிகாரமும் கூடயில்லாமல் அவர் வேலையை விட்டு அனுப்பிவிடப்பட்டார் muppatu varuṭaṅkaḷ paṇiyāṟṟiya piṟaku, oru taṅkak kaṭikāramum kūṭayillāmal avar vēlaiyai viṭṭu aṉuppiviṭappaṭṭār muppadu varuṣanga veele senjappuram, tanga kaḍiyaaramum kuuḍa illaama avar veeleye viṭṭu anuppiṭṭaanga He was let go after 30 years of service, without even a gold watch.
Synonyms:
விடுதலை செய் (1 tr) viṭutalai cey (viḍudale seyyi ) (2b tr) free; set free; set at liberty, as from jail
Usage:
கடைசியில், டி என் ஏ ஆதாரமெதுவும் இல்லாததால் அவனை விடுதலை செய்தார்கள் kaṭaiciyil, ṭi eṉ ē ātārametuvum illātatāl avaṉai viṭutalai ceytārkaḷ kaḍesiyle, ḍi en ee aadaaramedum illaadadaale avane viḍudale senjaanga Finally, he was let go, based on lack of DNA evidence.
போக விடு pōka viṭu (poohaviḍu) (4 tr) release o's hold or grasp and allow s.o. to go; take o's hands off
Usage:
அவனைப் பிடித்துவைக்க முயற்சி செய்தேன், ஆனால் அது முடியாமல் தயக்கத்துடன் அவனைப் போகவிட்டேன் avaṉaip piṭittuvaikka muyaṟci ceytēṉ, āṉāl atu muṭiyāmal tayakkattuṭaṉ avaṉaip pōkaviṭṭēṉ avane piḍiccuvekka moyarci senjeen, aanaa adu muḍiyaama tayakkattooḍa avane poohaviṭṭeen I tried to hold on to him, but I couldn't, and reluctantly let go.