trail இழுத்துக்கொண்டு வா iḻuttukkoṇṭu vā (iḻuttukiṭṭu vaa) (2c intr) permit to drag or stream behind, as along the ground
Usage:
அவன் அறையில் நுழையும்பொழுது தன்னோட துண்டைத் தரையில் இழுத்துக்கொண்டே வந்தான் avaṉ aṟaiyil nuḻaiyumpoḻutu taṉṉōṭa tuṇṭait taraiyil iḻuttukkoṇṭē vantāṉ avan ruumle noḻenjappa tannooḍa tuṇḍe tareyle iḻuttukiṭṭee vandaan He entered the room, trailing his towel on the floor.
பின்தங்கு piṉtaṅku (pintangu) (3 intr) follow slowly, lag behind
Usage:
மலையை ஏறும்பொழுது நான் மெதுவாகப் போனதால் என் நண்பர்களைவிட மிகவும் பின்தங்கி இருந்தேன் malaiyai ēṟumpoḻutu nāṉ metuvākap pōṉatāl eṉ naṇparkaḷaiviṭa mikavum piṉtaṅki iruntēṉ male eerumboodu naan meduvaa poonadaale naan en kuuṭṭaaḷingaḷe viḍa romba pintangiyirundeen I trailed way behind my friends while climbing the mountain because I was going so slowly.
படர் paṭar (paḍar) (2 intr) extend, grow or droop over a surface
Usage:
இந்தச் செடி தூண் மேல் எப்படிப் படர்ந்திருக்கிறது, பார்! intac ceṭi tūṇ mēl eppaṭip paṭarntirukkiṟatu, pār! inda ceḍi tuuṇu meele eppaḍi paḍandurukku, paaru? Look how this plant has grown up and trailed over the pillar!
பின்தொடர் piṉtoṭar (pintoḍar) (2 intr) drift in a tenuous stream behind s.o. or s.t.
Usage:
வின்ஸ்டன் சர்ச்சில் அறைக்குள் நுழையும்போது பெரும்பாலும் அவருடைய சுருட்டுப் புகை அவரைப் பின்தொடரும் viṉsṭaṉ carccil aṟaikkuḷ nuḻaiyumpōtu perumpālum avaruṭaiya curuṭṭup pukai avaraip piṉtoṭarum vinsḍan carccil ruumukkuḷḷe noḻeyrappa perumbaalum avarooḍe suruṭṭu pohe avare pintoḍarum When he entered a room, Winston Churchill would be typically trailing a cloud of cigar smoke behind him.