mug அடித்துப் போடு aṭittup pōṭu (aḍiccu pooḍu) (4 tr) assault with an intention to rob, esp. on an open street
Usage:
இந்த ஊரில் ராத்திரியில் தனியாகப் போனால் யாராவது உங்களை அடித்துப் போட்டுவிட்டுப் பணத்தை எல்லாம் திருடிவிடுவார்கள் inta ūril rāttiriyil taṉiyākap pōṉāl yārāvatu uṅkaḷai aṭittup pōṭṭuviṭṭup paṇattai ellām tiruṭiviṭuvārkaḷ inda uurule raattiriyle taniyaa poonaa yaaraavadu ongaḷe aḍicci pooṭṭuṭṭu paṇatteyellaam tiruḍiḍuvaanga If you walk alone in this town at night you will be mugged and all your money stolen.
Synonyms:
கீழே தள்ளு (3 tr) (kiiṛee taḷḷu)
கோணிகாட்டு kōṇikāṭṭu (kooṇikaaṭṭu) (3 intr) make faces; look silly
Usage:
நூறு பேர் இருக்கிற இந்த நிழற்படத்தில் இவன் மட்டும் தனியாகத் தெரியக் கோணி காட்டியிருக்கிறான் nūṟu pēr irukkiṟa inta niḻaṟpaṭattil ivaṉ maṭṭum taṉiyākat teriyak kōṇi kāṭṭiyirukkiṟāṉ nuuru peeru irukkra inda fooṭṭoovule ivan maṭṭum taniyaa teriya kooṇi kaaṭṭiyirukkaan Just because he wanted to stand out somehow, he mugged and made a stupid face in a photo taken with over a hundred other people.