mount (on) பொறுத்து poṟuttu (poruttu) (3 tr) fix or attach s.t. on a flat surface with nails or other fasteners
Usage:
எங்களுடைய திருமணப் படங்களையெல்லாம் ஒரு பெரிய அட்டையில் பொருத்திக் கண்ணாடிபோட்டு வைத்திருக்கிறோம் eṅkaḷuṭaiya tirumaṇap paṭaṅkaḷaiyellām oru periya aṭṭaiyil poruttik kaṇṇāṭipōṭṭu vaittirukkiṟōm engaḷooḍa kalyaaṇa paḍatteyellaam oru periya aṭṭeyle porutti kaṇṇaaḍi pooṭṭu vaccirukkoom We have mounted all our marriage photos on a big piece of cardboard and framed them under glass.
ஏறு ēṟu (eeru) (3 intr) get on (a horse, bicycle etc); board
Usage:
பள்ளிக்கூடம் முடிந்ததோ இல்லையோ எல்லா மாணவர்களும் தங்களுடைய மிதிவண்டியில் ஏறிப் பறந்துவிட்டார்கள் paḷḷikkūṭam muṭintatō illaiyō ellā māṇavarkaḷum taṅkaḷuṭaiya mitivaṇṭiyil ēṟip paṟantuviṭṭārkaḷ paḷḷikkuuḍam muḍinjadoo illeyoo ellaa maaṇavangaḷum avangaḷooḍa saikkiḷḷe eeri paranduṭṭaanga All the students mounted their bicycles and raced home as soon as school was over, or even before.