intern அடைத்து வை aṭaittu vai (aḍeccu vayyi) (6b tr) shut in or confine s.o.; keep s.o. in custody or confinement for a particular reason
Usage:
இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய அமேரிக்கர்களை மேற்குக் கடற்கரையிலிருந்து மிகத் தூரத்திலிருக்கும் முகாம்களில் அடைத்து வைத்திருந்தார்கள் iraṇṭāvatu ulakap pōril jappāṉiya amērikkarkaḷai mēṟkuk kaṭaṟkaraiyiliruntu mikat tūrattilirukkum mukāmkaḷil aṭaittu vaittiruntārkaḷ reṇḍaavadu olaha poorappa japaaniya ameerikkare ellaam meekku kaḍalkareyulerundu romba duurattule irukkura mohaamule aḍeccu veccirundaanga During WWII, Japanese Americans were interned in camps far from the west coast.
Synonyms:
சிறையில் அடை (6b tr) (sereyle aḍe)
காவலில் வை kāvalil vai (kaavalle vayyi) (6b tr) put s.o. in confinement or under custody, as for a crime, a political necessity, etc.; isolate s.o.
Usage:
ஒழுங்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பர்மா நாட்டு ஜனாதிபதி பல ஆண்டுகளாகச் சட்ட விரோத இராணுவ ஆட்சியால் காவலில் வைக்கப்பட்டுள்ளார் oḻuṅkākat tērnteṭukkappaṭṭa parmā nāṭṭu jaṉātipati pala āṇṭukaḷākac caṭṭa virōta irāṇuva āṭciyāl kāvalil vaikkappaṭṭuḷḷār saṭṭattukku viroodamaana raaṇuva aaḍci jananga oḻungaa teerndeḍutta barmaa naaṭṭu janaadibadiye nereya varuṣamaa kaavalle veccirukku The duly-elected President of Burma has been interned for years now by the illegal military government.
சிறையில் வை ciṟaiyil vai (sereyle vayyi) (6b tr) put s.o. in prison, as a punishment, a wartime necessity, a political manoeuver, etc.
Usage:
ஸ்டாலினும் ஹிட்லரும் நிறைய மக்களைச் சிறையில் வைத்தார்கள். அதில் பல மக்கள் இறந்து போனார்கள் sṭāliṉum hiṭlarum niṟaiya makkaḷaic ciṟaiyil vaittārkaḷ. atil pala makkaḷ iṟantu pōṉārkaḷ sḍaalinum hiṭlarum nereya janangaḷe sereyle veccaanga. adule nereyaa jananga erandu poonaanga Stalin and Hitler both interned a lot of people, many of whom died.