grapple (with) பிடி piṭi (piḍi) (6b tr) catch; seize; lay hold of; struggle with
Usage:
நாங்கள் இப்போது பள்ளிக்கூடம் கட்டணங்கள் விஷயத்தைப் பிடித்துக்கொண்டு இருக்கிறோம் nāṅkaḷ ippōtu paḷḷikkūṭam kaṭṭaṇaṅkaḷ viṣayattaip piṭittukkoṇṭu irukkiṟōm naanga ippa paḷḷikkuuḍam kaṭṭananga viṣayatte piḍiccukkiṭṭirukkoom We are grappling with the issue of school payments right now.
கட்டிப் பிடித்துப் போராடு kaṭṭip piṭittup pōrāṭu (kaṭṭi piḍiccu pooraaḍu) (3 intr) hold and struggle, as with a person; grab or hold firmly or tightly;
Usage:
விமானக் கடத்தல்காரன் விமானத்தை விட்டு இறங்கிய போது அதிகாரிகள் அவனைக் கட்டிப் பிடித்துப் போராடிக் கைது செய்தார்கள் vimāṉak kaṭattalkāraṉ vimāṉattai viṭṭu iṟaṅkiya pōtu atikārikaḷ avaṉaik kaṭṭip piṭittup pōrāṭik kaitu ceytārkaḷ vemaana kaḍattalkaaran vemaanatte viṭṭu erangiyappa adihaaringa avane kaṭṭi piḍiccu pooraaḍi kaidu senjaanga When the hijacker got out of the plane, agents grappled with him and detained him.
போராடு pōrāṭu (pooraaḍu) (3 intr) work hard, struggle or cope, as with a problem, etc.; contend or struggle, as with a person
Usage:
அவன் போராட வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருந்தன avaṉ pōrāṭa vēṇṭiya piraccaṉaikaḷ niṟaiya iruntaṉa avan pooraaḍaveeṇḍiya praccanellaam nereya irundadu He's had a lot of problems to grapple with.