go through துருவிப் பார் turuvip pār (turuvi paaru) (6 tr) repeat instructions; read line by line
Usage:
நான் இதை உன்னுடன் துருவிப் பார்க்கிறேன். அதனால் நாம் எல்லோருக்கும் இது புரியும் nāṉ itai uṉṉuṭaṉ turuvip pārkkiṟēṉ. ataṉāl nām ellōrukkum itu puriyum naan ide onnooḍu turuvi paakkreen. adanaale naama ellaarukkum idu purinjukkalaam I'll go through this with you in detail, so we all understand it.
அனுபவி aṉupavi (anubavi) (6b tr) experience or suffer, as hardships, etc.; persevere with or get to the end of; complete s.t. with difficulty
Usage:
சுனாமியால் அவர்கள் நிறைய அனுபவித்தார்கள். ஆனால் இன்னும் எல்லாம் சாதாரண நிலைக்குத் திரும்பவில்லை cuṉāmiyāl avarkaḷ niṟaiya aṉupavittārkaḷ. āṉāl iṉṉum ellām cātāraṇa nilaikkut tirumpavillai sunaaminaale avanga nereya anubavicciṭṭaanga. aanaa ellaam innum saadaaraṇa nelekki tirumbale They went through a lot with the tsunami, but things still haven't returned to normal.
Synonyms:
ஒரு வழியாக முடி (6b tr) (oru vaṛiyaa muḍi)
ஏற்கப்படு ēṟkappaṭu (ottukkoo) (4 intr) be approved officially; be accepted, processed, as a plan, etc.
Usage:
திட்டம் ஏற்கப்பட்டு, அரசாங்கத்தால் சட்டமாக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது tiṭṭam ēṟkappaṭṭu, aracāṅkattāl caṭṭamākkappaṭṭuc ceyalpaṭuttappaṭṭatu tiṭṭatte ottukkiṭṭu, arasaangam ade saṭṭamaakki seyalpaḍuttunaanga The plan went through, was enacted into law by the government, and implemented.
முடித்துவிடு muṭittuviṭu (muḍiccuḍu) (4 tr) finish, complete; get to the end of; use up, as money, etc.; deplete; spend completely
Usage:
அவனுடைய பணத்தையெல்லாம் முடித்துவிட்டு அதற்குப்பிறகு திரும்பிவந்து இன்னும் நிறையப் பணம் கேட்கிறான் avaṉuṭaiya paṇattaiyellām muṭittuviṭṭu ataṟkuppiṟaku tirumpivantu iṉṉum niṟaiyap paṇam kēṭkiṟāṉ avanooḍa paṇatteyellaam muḍicciṭṭu adukkapram tirumbi vandu innum nereya paṇam keekkuraan? He went through all his money, and then came back and asked for more!
Synonyms:
தீர்த்துவிடு (4 tr) (tii(r)ttuḍu)
பல பதிப்புக்கள் கடந்துவிடு (4 tr) pala patippukkaḷ kaṭantuviṭu (nereya padippu taaṇḍu) (3 tr) (of a book) be published or sold out in several editions or reprints
Usage:
இந்தப் புத்தகம் ஐந்து பதிப்புக்களைக் கடந்து இன்னும் அச்சிடப்படுகிறது intap puttakam aintu patippukkaḷaik kaṭantu iṉṉum acciṭappaṭukiṟatu anju padippe taaṇḍiyum inda pustahatte innum acciḍuraanga The book went through five editions, and is still being reprinted.