give out கிளப்பு kiḷappu (keḷappu) (3 tr) send out, as noise; emit, as smell, sound, smoke, etc.
Usage:
இந்த வண்டியைச் சும்மாத் தொட்டால் போதும், அது கீச்சலையும் எச்சரிக்கைச் சத்தத்தையும் கிளப்பிவிடும் inta vaṇṭiyaic cummāt toṭṭāl pōtum, atu kīccalaiyum eccarikkaic cattattaiyum kiḷappiviṭum inda kaare summaa toṭṭaa, poodum, add kiiccaleyum eccarikke sattatteyum keḷappiḍum If you just so much as touch his car, it gives out shrieks and warning sounds.
களைத்துப்போ kaḷaittuppō (kaḷeccuppoo) (3b intr) become exhausted, tired or worn out
Usage:
இரண்டு மணி நேரம் கைப்பந்து விளையாடிய பிறகு நான் களைத்துப்போய்விட்டேன் iraṇṭu maṇi nēram kaippantu viḷaiyāṭiya piṟaku nāṉ kaḷaittuppōyviṭṭēṉ reṇḍu maṇi neeram kaippandu veḷeyaaḍinadappram naan kaḷeccu pooyiṭṭeen After two hours of volleyball, I just gave out.
Synonyms:
ஆகிப்போ (3b intr) (aayi poo)
தீர்ந்துபோ tīrntupō (tii(r)ndupoo) (3 intr) run out; become exhausted or used up
Usage:
பணம் தீர்ந்துபோய்விட்டதால் நம்மால் புதிய ஒப்பந்தம் எதுவும் வழங்க முடியாது paṇam tīrntupōyviṭṭatāl nammāl putiya oppantam etuvum vaḻaṅka muṭiyātu paṇam tiindupoonadunaale nammaale pudu oppandam eduvum kuḍukka muḍiyaadu The money has given out, so we can't award any more contracts.
Synonyms:
தீர்ந்து விடு (4 intr) (tiinduḍu) வெளிப்படுத்து (3 tr) (veḷi-paḍuttu)
வெளியிடு veḷiyiṭu (veḷiyiḍu) (4 tr) make s.t. known publicly; make known; announce; let it be known, reveal
Usage:
அவர்களுடைய கணக்குவழக்குகள் திருட்டுப் போனதைப் பற்றி கடைசியாக அவர்கள் தகவல் வெளியிட்டு இருக்கிறார்கள் avarkaḷuṭaiya kaṇakkuvaḻakkukaḷ tiruṭṭup pōṉataip paṟṟi kaṭaiciyāka avarkaḷ takaval veḷiyiṭṭu irukkiṟārkaḷ avangaḷooḍa kaṇakkuvaḻakku tiruṭṭu poonade patti kaḍesiyle avanga tahaval veḷiyiṭṭirukkaanga Finally they gave out the information about the theft of their records.
Synonyms:
சொல் (3c tr) (sollu)
விநியோகி viniyōki (vinyoohi) (6b tr) distribute; issue; hand out, as questions, papers, money, etc.
Usage:
மேற்பார்வையாளர்கள் பரிட்சைத் தாள்களை விநியோகித்தார்கள், அதன் பிறகு மாணவர்கள் எழுதத் தொடங்கினார்கள் mēṟpārvaiyāḷarkaḷ pariṭcait tāḷkaḷai viniyōkittārkaḷ, ataṉ piṟaku māṇavarkaḷ eḻutat toṭaṅkiṉārkaḷ meelpaarveyaaḷarnga pariḍce taaḷee vinyoohiccaanga, adukkapparam maaṇavanga eḻuda toḍangunaanga The proctors gave out the tests and the students began to write.
நின்று விழு niṉṟu viḻu (niṇṇu viḻu) (4 intr) stop working; fail, as an engine, etc.; break down, as a car, etc.
Usage:
ஏழு மைல் ஏறின பிறகு எஞ்சின் நின்று விழுந்துவிட்டது ēḻu mail ēṟiṉa piṟaku eñciṉ niṉṟu viḻuntuviṭṭatu eeḻu mail eerinapram enjin niṇṇu viḻunduṭṭudu After climbing for seven miles, the engine just gave out, and broke down.
Synonyms:
அயர்ந்து விழு (4 intr) (asanduḍu) நின்று போ (3b intr) (niṇṇu poo)
சொல்லிக் கொள் (1 tr) collik koḷ (solli koo ) (4 tr) declare, announce or claim o.s. to be
Usage:
தான் ஒரு புகழ்பெற்ற நடிகையாக இருந்தவளென அவள் சொல்லிக் கொண்டிருந்தாள் tāṉ oru pukaḻpeṟṟa naṭikaiyāka iruntavaḷeṉa avaḷ collik koṇṭiruntāḷ ava oru pohaḻ aḍenja naḍiheyaa irundavaṇṇu ava sollikkiṭṭirundaa She used to give out that she had been a famous actress.