file சமர்ப்பி camarppi (samarppi) (6b tr) submit, as an application, a petition, etc.; register officially
Usage:
விவசாயிகள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியாளரிடம் சமர்ப்பித்தனர் vivacāyikaḷ taṅkaḷ kuṟaikaḷai māvaṭṭa āṭciyāḷariṭam camarppittaṉar vevasaayinga tangaḷooḍa koreyellaam kalekḍarkiṭṭe samarppiccaanga The farmers filed their petitions with the Collector.
வழக்குத் தொடு vaḻakkut toṭu (vaḻakku toḍu) (6 trr) submit a case or suit in a court of law
Usage:
அமெரிக்காவில் சிறு விஷயங்களுக்குக் கூட வழக்குத் தொடர்வது சகஜம் amerikkāvil ciṟu viṣayaṅkaḷukkuk kūṭa vaḻakkut toṭarvatu cakajam amerikkaale cinna viṣayattukku kuuḍa vaḻakku toḍaradu sahajam It is common in America to file lawsuits even for small things.
Synonyms:
பதிவு செய் (1 tr) (padivu seyyi nb tr)
கோப்பில் சேர் kōppil cēr (kooppule seer) (6 tr) put (papers, etc.) away in a file; sort and put away
Usage:
வேலைக்கு வந்த விண்ணப் பங்களையெல்லாம் தவறான கோப்பில் சேர்த்துவைத்திருக்கிறார்கள் vēlaikku vanta viṇṇap paṅkaḷaiyellām tavaṟāṉa kōppil cērttuvaittirukkiṟārkaḷ veelekki vanda viṇṇapatteyellaam tappaana kooppule seettu veccirukkaanga They filed the job application forms in the wrong place.