color வர்ணம் பூசு varṇam pūcu (varṇam puusu) (3 tr) apply color to; paint; tint
Usage:
மாட்டுப் பொங்கலுக்கு உழவர்கள் மாட்டுக் கொம்புகளுக்கு வர்ணம் பூசிச் சிங்காரித்தனர் māṭṭup poṅkalukku uḻavarkaḷ māṭṭuk kompukaḷukku varṇam pūcic ciṅkārittaṉar maaṭṭu pongalukku oḻavanga maaṭṭu kombuhaḷukku varṇam puusi singaariccaanga The farmers colored the horns of the cows and decorated them for the Maattu Pongal festival.
நிறமேற்று niṟamēṟṟu (nerameettu) (3 tr) tinge; dye
Usage:
அவர் நாற்பது வயதை அடைந்த போது தன்னுடைய முடிக்கு நிறமேற்ற ஆரம்பித்தார் avar nāṟpatu vayatai aṭainta pōtu taṉṉuṭaiya muṭikku niṟamēṟṟa ārampittār avar naappadu vayase aḍenjappoo avarooḍa muḍikki nerameetta aarambiccaar When he turned 40, he started coloring his hair.
நிறமாகு niṟamāku (neramaahu) (3b intr) take on color; change in complexion
Usage:
வெளிநாடு போனபின்னர் அவள் நல்ல நிறமாகிவிட்டாள் veḷināṭu pōṉapiṉṉar avaḷ nalla niṟamākiviṭṭāḷ veḷinaaḍu poonadukkappuram ava nalla neramayiṭṭaa She took on color after going abroad.