discount தள்ளுபடி செய் (1 tr) taḷḷupaṭi cey (taḷḷubaḍi seyyi) (2b tr) offer for sale at a reduced price; offer a discount or reduction in price; cut price(s) down
Usage:
பழைய கணனிகளின் விலையைத் தள்ளுபடி செய்திருக்கிறார்கள் paḻaiya kaṇaṉikaḷiṉ vilaiyait taḷḷupaṭi ceytirukkiṟārkaḷ paḻeya kampyuṭṭarooḍa veleye taḷḷubaḍi senjirukkanga They have discounted the price of the older models of their computers.
dismiss தள்ளுபடி செய் (1 tr) taḷḷupaṭi cey (taḷḷubaḍi seyyi ) (2b tr) decline to sanction (a count, verdict, etc.); overrule, disallow, put aside, exclude from consideration
Usage:
எதிர்த்தரப்பு வக்கீலின் வாதத்தை நீதிபதி தள்ளுபடி செய்தார் etirttarappu vakkīliṉ vātattai nītipati taḷḷupaṭi ceytār edirtarappu vakkiilooḍa vaadatte niidibadi taḷḷubaḍi senjaaru The judge dismissed the opposing lawyer's argument.
forgive தள்ளுபடி செய் (1 tr) taḷḷupaṭi cey (taḷḷubaḍi seyyi ) (2b tr) write off, as a debt, interest, or both (leniently or expediently); make concessions; give up o's right to claim repayment
Usage:
ஏழை நாடுகளின் கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று பணக்கார நாடுகளை இங்கிலாந்து அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது ēḻai nāṭukaḷiṉ kaṭaṉait taḷḷupaṭi ceyyavēṇṭum eṉṟu paṇakkāra nāṭukaḷai iṅkilāntu aracāṅkam kēṭṭukkoḷkiṟatu eeḻe naaṭṭooḍa kaḍane taḷḷubaḍi seyyaṇumṇu paṇakkaara naaṭṭe ingilaandu arasaangam keeṭṭukkudu Britain is asking the richer nations to forgive the debt of the poorer nations.
knock off தள்ளுபடி செய் (1 tr) taḷḷupaṭi cey (taḷḷubaḍi seyyi) (2b tr) make a reduction of; deduct or take off s.t., as from a bill, listed price, etc.
Usage:
நீங்கள் எங்கள் கடையில் எதை டஜனாக வாங்கினாலும், நாங்கள் பத்துச் சதவிகிதம் தள்ளுபடி செய்வோம் nīṅkaḷ eṅkaḷ kaṭaiyil etai ṭajaṉāka vāṅkiṉālum, nāṅkaḷ pattuc catavikitam taḷḷupaṭi ceyvōm niinga enga kaḍeyule ede ḍasanaa vaangunaalum, naanga pattu sadaviidam taḷḷubaḍi seyvoom Whatever you buy by the dozen in our shop, we knock off 10 percent.
repeal தள்ளுபடி செய் (1 tr) taḷḷupaṭi cey (taḷḷubaḍi seyyi) (2b tr) revoke or rescind, esp. by an official or formal act
Usage:
நீதிமன்றம் அளித்த உத்தரவைத் தள்ளுபடி செய்ய மனுத் தாக்கினார்கள் nītimaṉṟam aḷitta uttaravait taḷḷupaṭi ceyya maṉut tākkiṉārkaḷ They petitioned the court to repeal the order.